முதல்வர் கோப்பை மாநில போட்டி அக்., 2ல் சென்னையில் துவக்கம்
சென்னை;சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அக்., 2ல் துவங்கும் முதல்வர் கோப்பைக்கான மாநில போட்டிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், மாவட்ட அளவிலான போட்டிகள், அந்தந்த மாவட்டங்களில் கடந்த ஆகஸ்ட மாதம் முழுதும் நடந்தன. தொடர்ந்து, மாநில அளவிலான போட்டிகள், அக்., 2ல் துவங்கி, 14ம் தேதி வரை, சென்னை, செங்கல்பட்டு, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நடக்கின்றன. அதற்கான பட்டியலை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்டது. சென்னையில் நடக்கும் போட்டியின் விபரம் விளையாட்டுகள் இடம் தேதிகள் (அக்டோபர்) பளு துாக்குதல் நேரு அரங்கம் 2 - 11 ஜூடோ நேரு அரங்கம் 7 - 14 வாள்வீச்சு நேரு அரங்கம் 3 - 10 வாலிபால் நேரு அரங்கம் 7 - 14 பாக்சிங் கலைஞர் அரங்கம், கோட்டூர்புரம் 6 - 13 கபடி நேரு பூங்கா 2 - 13 நீச்சல் எஸ்.டி.ஏ.டி., வேளச்சேரி 10 - 13 ஜிம்னாஸ்டிக் எஸ்.டி.ஏ.டி., வேளச்சேரி 4 - 7 டென்னிஸ் எஸ்.டி.ஏ.டி., நுங்கம்பாக்கம் 3 - 13 கிரிக்கெட் சென்னை, அண்ணா பல்கலை 5 - 12 ஸ்குவாஷ் நேரு அரங்கம், நேரு பூங்கா 7 - 11 சாலை சைக்கிளிங் தீவுத்திடல் 13 - 14 கபடி வண்டலுார் 13 - 14 கால்பந்து நேரு அரங்கம், ஷெனாய் நகர் 2 - 14 பேட்மின்டன் வண்டலுார் 2 - 13 டேபிள் டென்னிஸ் வண்டலுார் 10 - 13 சிலம்பம் வண்டலுார் 2 - 9 எறிப்பந்து வண்டலுார் 7 - 8 மாற்றுத்திறனாளி தடகளம் வண்டலுார் 3 - 4 பார்வையற்றோர் தடகளம் வண்டலுார் 9 - 10 மாற்றுத்திறனாளி வாலிபால் வண்டலுார் 9 - 10 வாதம் பாதித்தோர் தடகளம் வண்டலுார் 4 - 5 மாற்றுத்திறனாளி கால்பந்து வண்டலுார் 4 - 5 காதுகேளாதோர் தடகளம் வண்டலுார் 12 - 13