மேலும் செய்திகள்
மருத்துவ முகாமில் 100 பேர் பயன்
27-Jan-2025
மடிப்பாக்கம்,: காஞ்சிபுரம் வடக்கு ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதியும், பம்மல் சங்கரா கண் மருத்துவமனையும் இணைந்து, இலவச கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாமை, வரும், 20ம் தேதி, மடிப்பாக்கம், கார்த்திகேயபுரம், ஆறாவது தெருவில் உள்ள சமிதியில் நடத்துகிறது.காலை 8:00 மணி முதல் பகல் 12:00 மணிவரை நடக்கும் இந்த முகாமில் தேர்வு செய்யப்படும் ஏழை, எளியோருக்கு, சங்கரா கண் மருத்துவமனையில், 'விழி லென்ஸ்' பொருத்தப்படுகிறது. அறுவை சிகிச்சை, போக்குவரத்து வசதி, தங்கும் இடம், உணவு அனைத்தும் இலவசம். கண்புரை பாதிப்பு உள்ளவர்கள், முகாம் அன்றே அறுவை சிகிச்சைக்கு செல்ல தயாராக வரவேண்டும். ஆதார் அட்டை நகல் எடுத்து வர வேண்டும். சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு, இதய நோய் உள்ளவர்கள், மருந்து, மருந்து சீட்டு எடுத்து வர வேண்டும்.சிகிச்சை முடிந்த பின், முகாம் நடந்த இடத்தில் அழைத்து வந்து விடப்படுவர். மேலும் விபரங்களுக்கு, முகாம் ஒருங்கிணைப்பாளர்களை, 97109 10542, 82209 57937 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
27-Jan-2025