திருவள்ளூரில் சிட்கோ புதிய தொழிற்பேட்டை
சென்னை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரிய தொழில் நிறுவனங்களின் தொழிற்சாலைகள் அதிக அளவில் செயல்படுகின்றன.மேற்கண்ட மாவட்டங்களில், நிலத்தின் மதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் வாகனம், கனரக இயந்திரங்களின் உதிரிபாகங்கள் போன்றவற்றின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள குறு, சிறு தொழில் நிறுவனங்கள், புதிதாக ஆலை அமைக்க இடமின்றி சிரமப்பட்டு வருகின்றன. எனவே, அந்நிறுவனங்கள் பயன்பெறுவதற்காக, 'சிட்கோ' எனப்படும் தமிழக சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம், திருவள்ளூர் மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகில், புதிய தொழிற்பேட்டை அமைக்க இடம் அடையாளம் கண்டறிந்துள்ளது.அங்கு தொழிற்பேட்டை அமைக்கப்பட்ட பின், அங்குள்ள தொழில் மனைகள், சிறு, குறு நிறுவனங்கள் ஆலைகளை அமைக்க ஒதுக்கப்படும். தற்போது, சிட்கோ நிறுவனம் மாநிலம் முழுதும், 8,600 ஏக்கரில், 130 தொழிற்பேட்டைகளை நிர்வகித்து வருகிறது.