மடிப்பாக்கம் சாலை மீடியனில் மாநகர பஸ் மோதி விபத்து
மடிப்பாக்கம் :மடிப்பாக்கம், பஜார் சாலை மீடியன் வசதிகளுடன் சில ஆண்டுகளுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்டது.ஆனால், பல இடங்களில் சாலை மிகவும் குறுகியுள்ளதால், ஆங்காங்கே மீடியன் அமைக்கப்படவில்லை.இச்சாலையின் இருபுறமும், ஏராளமான கடைகள் உள்ளன. அங்கு வரும் வாடிக்கையாளர்கள், சாலையிலயே வாகனங்களை விடுவதால், பஜார் சாலையில் தினசரி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.இந்நிலையில், திருவான்மியூரில் இருந்து மடிப்பாக்கம் நோக்கி, வழித்தடம் எம்-1 என்ற மாநகர பேருந்து, நேற்று இரவு வந்து கொண்டிருந்தது.மடிப்பாக்கம், பஜார் சாலை, ராம்நகர் பகுதியில் வந்ததுபோது, மழை பெய்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மீடியன் மீது பலமாக மோதியது.இதில், பேருந்தில் பயணித்த அனைவரும் அலறி கூச்சலிட்டனர். சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.ஓட்டுநர் இருக்கை பகுதியில் சிதைந்ததால், பேருந்தை உடனடியாக அப்புறப்படுத்த முடியவில்லை. அதற்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஒரு கி.மீ., துாரம் அணிவகுத்து நின்றன.தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலசார், ராம்நகர், சதாசிவம் நகர் வழியாக வாகனங்களை திருப்பிவிட்டு, போக்குவரத்தை சீர் செய்தனர்.