உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  792 திட்டத்திற்கு சி.எம்.டி.ஏ., ஒப்புதல் ஆன்லைன் முறையில் வழங்கியது

 792 திட்டத்திற்கு சி.எம்.டி.ஏ., ஒப்புதல் ஆன்லைன் முறையில் வழங்கியது

சென்னை: சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், 2025ம் ஆண்டு, 792 கட்டுமான திட்டங்களுக்கு 'ஆன்லைன்' முறையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர் பகுதியில், கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும் பணிகளை, சி.எம்.டி.ஏ., மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான பணிகள், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. கடந்த, 2021 முதல் ஆன்லைன் முறையில் ஒப்புதல் வழங்கப்பட்டாலும், தற்போது ஒற்றை சாளர முறையில் கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதில், திட்ட அனுமதி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும், ஆன்லைன் முறைக்கு மாற்றப்படுவதால் பரிசீலனைக்கான காலம், படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025ம் ஆண்டு ஜன., முதல் டிச., வரை, அதிக உயரம் இல்லாத கட்டடங்கள் பிரிவில், 510; மனைப்பிரிவுகள், 184; உயரமான அடுக்குமாடி கட்டடங்கள், 44; நிறுவன கட்டடங்கள், 24; தொழிலக கட்டடங்கள், 30 என, மொத்தம், 792 கட்டுமான திட்ட கோப்புகளுக்கு ஆன்லைன் முறையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2024ல், 679; 2023ல் 569 திட்டங்களுக்கு ஆன்லைன் முறையில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. சென்னை பெருநகரில் குடியிருப்பு திட்டங்கள், மனைப்பிரிவுகள் அதிகரித்து வருவதால், திட்ட அனுமதி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியை இது சுட்டிக்காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை