உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காவல்துறை மேம்பாட்டு பணிக்காக ரூ.54.36 கோடி அளித்தது சி.எம்.டி.ஏ.,

காவல்துறை மேம்பாட்டு பணிக்காக ரூ.54.36 கோடி அளித்தது சி.எம்.டி.ஏ.,

சென்னை, வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்படி, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும்காவல் துறையினர் நலனுக்காக, 54.36 கோடி ரூபாயை, சி.எம்.டி.ஏ., வழங்கி உள்ளது.இந்த நிதியில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள்: வடசென்னையில், 9.16 கோடி ரூபாயில், 45 இடங்களில் நவீன கேமராக்கள் நிறுவப்பட உள்ளன. ரோந்து பணிக்காக, 90.6 லட்சம் ரூபாய் செலவில், 60 இருசக்கர வாகனம் கொள்முதல் செய்யப்பட உள்ளன குடிசைவாழ் பகுதிகளில் இளைஞர்களின் கல்வி திறன், விளையாட்டு திறனை மேம்பாடு உறுதி செய்ய, 60 லட்சம்ரூபாய் செலவில், 10இடங்களில் காவலர் சிறார் மன்றங்கள் அமைக்கப்பட உள்ளன போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 2.95 கோடி ரூபாயில் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட உள்ளன பணி நிமித்தமாக வெளியூர்களிலிருந்து வந்து செல்லும் காவல் துறையினர் தங்க வசதியாக காவலர் தங்கும் விடுதி, 9.75 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது கொளத்துார் மற்றும் பெரவள்ளூர் காவல் நிலையத்திற்கு, 31 கோடி ரூபாயில் புதிய கட்டம் கட்டப்பட உள்ளது. இதுகுறித்து, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறுகையில், 'தமிழக முதல்வர் உத்தரவுப்படி, 54.36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, சென்னை காவல் துறையினரிடம் வழங்கப்பட்டு உள்ளது. 'குற்றத்தடுப்பிற்காக செலவிடப்படும் இந்த நிதி வாயிலாக, பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், வணிக நிறுவனங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி