மேலும் செய்திகள்
செவிலியரை வெட்டி போன் பறிப்பு
27-Jun-2025
அமைந்தகரை,:பெங்களூரில் இருந்து கோகைன் போதை பொருளை கடத்தி, பார்சலுக்கு 5,000 ரூபாய் 'கமிஷன்' வாங்கியவரை, போலீசார் கைது செய்தனர். அமைந்தகரை அடுத்த ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில், இரு நாட்களுக்கு முன் கண்காணிப்பு பணியில் இருந்த அமைந்தகரை போலீசார், ஒருவரை பிடித்து சோதித்தனர். அதில், அவர் பிராட்வேயை சேர்ந்த அமிருதீன், 66, என்பதும், 49 கிராம் கோகைன் போதை பொருள் வைத்திருந்ததும் தெரிந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அமிருதீன் அளித்த தகவல்படி, அவருக்கு உதவியாக இருந்த மண்ணடியை சேர்ந்த அஸ்லாம், 66, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், பெங்களூரில் இருந்து, கோகைன் போதை பொருளை கடத்திவந்து, அமிருதீனுக்கு கொடுக்கும் வேலையை, அஸ்லாம் செய்து வந்ததும், இதற்காக பார்சலுக்கு 5,000 ரூபாய் கமிஷன் பெற்றதும் தெரிய வந்தது. வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
27-Jun-2025