கல்லுாரி மாணவி தற்கொலை
முகப்பேர், முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீவித்யா, 19. இவர், அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு இளங்கலை படித்து வந்தார்.இந்நிலையில், கல்லுாரியில் உடன் படிக்கும் பெண் தோழியுடன், ஸ்ரீவித்யாவுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த சில தினங்களாக, மன உளைச்சலில் இருந்துள்ளார்.இதனிடையே நேற்று அதிகாலை, படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் ஸ்ரீவித்யா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.தகவலறிந்து சென்ற நொளம்பூர் போலீசார், ஸ்ரீவித்யாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அவரது பெற்றோர் அளித்த புகாரின்படி, நொளம்பூர் போலீசார் வழக்கு பதிந்து, ஸ்ரீவித்யாவின் மொபைல் போனை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.