உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கல்லுாரி மாணவருக்கு அரிவாள் வெட்டு

கல்லுாரி மாணவருக்கு அரிவாள் வெட்டு

பல்லாவரம் : பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலை, தங்கவேல் தெருவை சேர்ந்தவர் ஹரிஷ், 22. தனியார் கல்லுாரி மாணவர். நேற்று காலை, கல்லுாரியில் கட்டணம் செலுத்திவிட்டு, அருகேயுள்ள டீ கடையில் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த ஆறு பேர், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஹரிஷை கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர். இதில், ஹரிஷ்க்கு சுண்டு விரல் துண்டானது. அங்கிருந்தவர்கள் ஹரிஷை மீட்டு, தாம்பரம் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பினர். பல்லாவரம் போலீசார் நடத்திய விசாரணையில், இரண்டு மாதங்களுக்கு முன், ஹரிஷ் தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்தது, அதனால் ஹரிஷை கொல்ல முயன்றதும் தெரிந்தது. பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை