மேலும் செய்திகள்
பெத்தி செமினார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
19-Oct-2024
சென்னை, வேப்பேரி, ஜெனரல் காலின்ஸ் சாலையில், செங்கல்வராயன் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரி நுாலகர் காசிலிங்கம் என்பவருக்கும், கல்லுாரி முதல்வர் காசிலிங்கத்திற்கும் பிரச்னை இருந்துள்ளது.இந்நிலையில், கணிணி அறிவியல் துறை தலைவர் ரூபனி என்பவர், முதல்வருக்கு ஆதரவாக, நுாலகர் மீது பாலியல் புகார் அளிக்கும்படி, மாணவியர் இருவரை வற்புறுத்தி உள்ளார். இதற்கு மாணவியர் சம்மதிக்காததால், முதல்வர் தரப்பிலிருந்து மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று, பெற்றோருடன் கல்லுாரிக்கு வந்த மாணவியர் மற்றும் மாணவர்கள், 150க்கும் மேற்பட்டோர், கல்லுாரி முதல்வர் மற்றும் கணிணி அறிவியல் துறை தலைவரை கண்டித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19-Oct-2024