உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போக்குவரத்து போலீசாருக்கு சன்கிளாஸ் திட்டத்தை துவக்கினார் கமிஷனர் அருண்

போக்குவரத்து போலீசாருக்கு சன்கிளாஸ் திட்டத்தை துவக்கினார் கமிஷனர் அருண்

சென்னை:சென்னையில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்கும் விதமாக, போக்குவரத்து போலீசாருக்கு காலை - மாலை என இரு வேலை ஆவின் மோர் வழங்கப்பட்டு வருகிறது.தர்மாகோலில் ஆன தொப்பியும் வழங்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து, போக்குவரத்து போலீசாருக்கு குளிரூட்டும் கண்ணாடிகள் வழங்க திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று, 1,500 போலீசாருக்கு குளிரூட்டும் கண்ணாடிகள் வழங்கும் திட்டத்தை, கமிஷனர் அருண் துவக்கி வைத்தார்.இதுகுறித்து, கூடுதல் கமிஷனர் சுதாகர் கூறியதாவது:'ஸ்பெக்ஸ்மேக்கர்' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட குளிரூட்டும் கண்ணாடிகள், போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்படுகிறது.ஒரு கண்ணாடி விலை, 1,990 ரூபாய் என, 29.85 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.குளிரூட்டும் கண்ணாடி அணிவதால், கண் சார்ந்த பாதிப்பு ஏதும் ஏற்ப்படாது.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து இணை கமிஷனர் பண்டி கங்காதர், துணை கமிஷனர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை