உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குற்றம் இல்லாத காணும் பொங்கல் போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு

குற்றம் இல்லாத காணும் பொங்கல் போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு

சென்னை,சென்னையில் காணும் பொங்கல் கொண்டாட்டம் நேற்று முன்தினம் நடந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா, எலியட்ஸ், நீலாங்கரை கடற்கரைகளிலும், கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடல் பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்களிலும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாத வண்ணம், 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து, டிரோன்கள் வாயிலாகவும் கண்காணித்தனர். பொதுமக்கள் யாரும் கடலில் இறங்காத வகையில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.கூட்ட நெரிசலில் குழந்தைகள் காணாமல் போனால், உடனடியாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கவும், ஐந்து இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு இருந்தன. இப்படி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், காணும் பொங்கல் அன்று எந்தவித குற்றச்சம்பவங்களும், கடலில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் எதும் நிகழாமல் தடுக்கப்பட்டன.சிறப்பாக பாதுகாப்பு அளித்த போலீசாரை, கமிஷனர் அருண் நேற்று வெகுவாக பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ