உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாதுகாப்பு நிலை குறித்து கமிஷனர் ஆலோசனை

பாதுகாப்பு நிலை குறித்து கமிஷனர் ஆலோசனை

சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், ஜன, 26ம் தேதி குடியரசு தினவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, கமிஷனர் அருண் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.அப்போது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள, 12 காவல் மாவட்டங்களிலும், உரிய வாகன சோதனை, விடுதிகளில் தங்குவோர், சந்தேக நபர்கள் தணிக்கை, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தகவல் தொடர்பு நிலையங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் தொடர்ச்சியான ரோந்து செல்லவும், முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழித்தடம், விழா நடைபெறும் இடம், முக்கிய விருந்தினர்கள் அமரும் பகுதி, அலங்கார ஊர்திகள் செல்லும் பகுதிகளில், பாதுகாப்பை கண்காணிக்க அதிகாரிகளுக்கு கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !