உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விபத்தில் இறந்த மாடுகளுக்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு

விபத்தில் இறந்த மாடுகளுக்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு

சென்னை,:செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே கருக்காமலை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர், சொந்தமாகன மாட்டு வண்டி வைத்து, தொழில் செய்து வந்தார்.கடந்த 2016ல், கிழக்கு கடற்கரை சாலையில், வேப்பஞ்சேரி பகுதியில் மாட்டு வண்டியில் சென்றபோது, அவ்வழியாக வந்த தனியார் பேருந்து மோதியது.இதில், மணிகண்டன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதே நேரம், 2 மாடுகள் இறந்தன. மாட்டு வண்டி பலத்த சேதம் அடைந்தது.இதைத்தொடர்ந்து, 6 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில், மணிகண்டன் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஷ்குமார் அளித்த உத்தரவு:பேருந்தை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்ததால், விபத்து நடந்துள்ளது.எனவே, விபத்தில் இறந்த மாடுகள் மற்றும் சேதம் அடைந்த மாட்டு வண்டிக்கு இழப்பீடாக, ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம், 1.50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !