உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கெட்டுப்போன சிக்கன் விற்ற கடை மீது புகார்

கெட்டுப்போன சிக்கன் விற்ற கடை மீது புகார்

புளியந்தோப்பு:புளியந்தோப்பு, வ.உ.சி. நகரை சேர்ந்தவர் காமேஷ்,32. இவர் கடந்த 10ம் தேதி இரவு பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள 'இக்பால் பாஸ்ட்புட்' என்ற கடையில், 350 ரூபாய் கொடுத்து கிரில் சிக்கன் வாங்கியுள்ளார்.வீட்டில் சென்று அதை பிரித்து பார்த்த போது, சிக்கன் கெட்டுப்போய் துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அந்த கெட்டுப்போன சிக்கனை மீண்டும் கடைக்கே சென்று கொடுத்து நியாயம் கேட்ட போது, கடை மேலாளர் சிராஜ், மிரட்டி திருப்பி அனுப்பியுள்ளார்.இதுகுறித்து புளியந்தோப்பு காவல்நிலையத்தில் காமேஷ் புகார் அளித்தார். இதன் படி, கடை மேலாளர் சிராஜ்,36 மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த சமையலர் சாஜித் அலி,26 ஆகியோரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை