வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மக்கள் கொடுத்த புகார்களெல்லாம் அந்த குப்பை தொட்டிக்கு போய்டுச்சு போல.
பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய லைட் ஹவுஸ் குடியிருப்பில், 1,152 வீடுகள் உள்ளன.இதன் நுழைவாயிலில், இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால், குப்பையை முறையாக அகற்றி, அந்த இடத்தை சுகாதாரமாக வைத்திருக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுப்பதில்லை.தொட்டி நிரம்பி வெளியே கொட்டுவதால், உணவு கழிவுகளுடன் கலந்த கழிவுநீர், நுழைவாயிலில் ஆறாக ஓடுகிறது.அதில் நடந்து செல்லும் பள்ளி மாணவ - மாணவியர், வேலைக்கு செல்வோர் சுகாதார சீர்கேடால் மிகவும் சிரமப்படுகின்றனர்.குப்பையில் உணவுக் கழிவுகளை உண்ண வரும் மாடுகள், சாலையில் செல்வோரை துரத்துவதால், அப்பகுதிவாசிகள் பீதி அடைந்துள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஹேமா, பெரும்பாக்கம்.
மக்கள் கொடுத்த புகார்களெல்லாம் அந்த குப்பை தொட்டிக்கு போய்டுச்சு போல.