புகார் பெட்டி:குட்டையில் வளர்ந்துள்ள செடிகளால் கொசு தொல்லை
குட்டையில் வளர்ந்துள்ள செடிகளால் கொசு தொல்லை
பூந்தமல்லி டிரங்க் சாலையில், பனையாத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பின்புறம்,4 ஏக்கர் பரப்பளவில் பனையாத்தம்மன் குட்டை உள்ளது. இக்குட்டை பராமரிப்பின்றி உள்ளதால், குட்டையைச் சுற்றி ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனால், 4 ஏக்கரில் இருந்து 2 ஏக்கராக குட்டை சுருங்கிவிட்டது. மேலும், குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலந்து மாசடைந்து உள்ளது. குட்டையின் மேற்பரப்பில் செடிகள் வளர்ந்துள்ளதால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.இதனால், 24 மணி நேரமும் பொதுமக்கள் கொசுக்கடியால் அவதிக்குள்ளாகின்றனர். இதனால், அப்பகுதியில் நோய் பரவும் ஆபத்து உள்ளது. வடகிழக்கு பருவமழைக்கு முன் இந்த குளத்தில் உள்ள செடிகளை அகற்ற, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சூரஜ்குமார், பூந்தமல்லி