உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புகார் பெட்டி பெரும்பாக்கம் மருத்துவமனையில் நாய்க்கடி ஊசி மருந்து பற்றாக்குறை

புகார் பெட்டி பெரும்பாக்கம் மருத்துவமனையில் நாய்க்கடி ஊசி மருந்து பற்றாக்குறை

பெரும்பாக்கம் மருத்துவமனையில் நாய்க்கடி ஊசி மருந்து பற்றாக்குறை

பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 23,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதி, சென்னை மாநகராட்சி எல்லையை ஒட்டி, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தில் உள்ளது.இங்கு, ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இரவு நேரத்தில் அவசர சிகிச்சைக்கு சென்றால், மருத்துவர் இருப்பதில்லை. சில நோய்களுக்கு, மாத்திரை கையிருப்பு இல்லை என்கின்றனர்.நாய்க்கடிக்கு ஊசி போட சென்றால், எந்த பகுதி என கேட்டு சிகிச்சை அளிக்கின்றனர். மாநகராட்சி பகுதியில் வசிக்கிறோம் என கூறினால், செம்மஞ்சேரி மருத்துவமனைக்கு செல்லுங்கள் என, திருப்பி அனுப்புகின்றனர்.கேட்டால், குறைந்த அளவு ஊசி மருந்து தான் வருகிறது என்கின்றனர். உயிர் காக்கும் பிரச்னையாக இருப்பதால், பெரும்பாக்கம் மருத்துவமனையில் பாரபட்சமில்லாமல் நாய்க்கடி ஊசி போட வேண்டும்.- தனலட்சுமி, பெரும்பாக்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ