உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுவனை காதலித்த இளம்பெண் மீது புகார்

சிறுவனை காதலித்த இளம்பெண் மீது புகார்

விருகம்பாக்கம், போரூரை சேர்ந்த, 17 வயது சிறுவனின் பெற்றோர், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகார் ஒன்றை அளித்தனர்.அதில், எங்கள் மகன் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பயின்று வருகிறார். அவர், பள்ளியில் படித்த போது, அதே வகுப்பில் படித்த, எங்கள் மகனை விட வயதில் மூத்த பெண்ணை காதலித்தார்.இதை நாங்கள் கண்டித்தும், இளம்பெண்ணின் காதலை தொடர்வதாக தெரிவித்தார். எனவே, 17 வயதான எங்கள் மகனை காதலிக்கும், 19 வயது பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறப்பட்டிருந்தது.இந்த புகாரின்படி, போலீசார் 19 வயது இளம்பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ