உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதல்வர் வழங்கிய பட்டா அடங்கலில் ஏற்றப்படவில்லை கிராம சபை கூட்டத்தில் புகார்

முதல்வர் வழங்கிய பட்டா அடங்கலில் ஏற்றப்படவில்லை கிராம சபை கூட்டத்தில் புகார்

தாம்பரம்:முடிச்சூர் ஊராட்சியில், முதல்வர் வழங்கிய பட்டா, அடங்கலில் ஏற்றப்படவில்லை என்ற புகாருக்கு, பதில் தெரியாமல் வி.ஏ.ஓ., விழித்தது, அதிருப்தியை ஏற்படுத்தியது. தமிழகம் முழுதும், ஊராட்சிகளில் நேற்று கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஊராட்சியிலும், முக்கியமான மூன்று பிரச்னைகள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டது. முடிச்சூர் ஊராட்சியில், குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில் முன்வைக்கப்பட்ட முடிச்சூர் - மணிமங்கலம் சாலை சந்திப்பில் மேம்பாலம், எரிவாயு தகனமேடை, மதனபுரம் - அடையாறு ஆறு இணைப்பு மூடுகால்வாய், துணை சுகாதார நிலையம் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினர். அப்போது, சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கிய பட்டாக்கள் அடங்கலில் ஏற்றப்படவில்லை என புகார் தெரிவித்தனர். கிராம நிர்வாக அலுவலர், மக்களின் கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்தார். அவரின் செயல், அங்கிருந்தவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. பொழிச்சலுார், கவுல்பஜார் ஊராட்சியிலும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வேங்கைவாசல் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில், அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்றார். இக்கூட்டத்தில், குப்பை பிரச்னை, குடிநீர் பிரச்னை, மின் விளக்கு ஆகிய மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ