உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அ.தி.மு.க., பொது செயலருக்கு கண்டனம்

அ.தி.மு.க., பொது செயலருக்கு கண்டனம்

சென்னை,: ஹிந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்பட்டு வரும் கல்லுாரிகள் குறித்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அவதுாறாக பேசியதாக, கொளத்துார் கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லுாரி மாணவர்களின் பெற்றோர், நேற்று திடீர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்லுாரி வாயில் முன், 100க்கும் மேற்பட்டோர் கூடி, பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்கள் கூறுகையில், 'அறநிலையத்துறை மூலம் கல்வி தருவதை தடுக்கும் பழனிசாமியை கண்டிக்கிறோம்.கடவுள் பணத்தில் கல்வி தருவது குற்றமா? இப்பகுதியில் ஏழைகள் பயன்பெறும் வகையில் இந்த கல்லுாரி செயல்படுவதை, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பழனிசாமி எதிர்ப்பது வேதனைக்குரியது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை