மேலும் செய்திகள்
973 வாகனங்கள் பறிமுதல் 26ல் ஏலம் விடும் போலீசார்
10-Mar-2025
பள்ளிக்கரணை,பள்ளிக்கரணை, காவல் நிலைய எல்லையில் கைப்பற்றப்பட்ட, 146 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளன.தாம்பரம் காவல் ஆணையகத்திற்குட்பட்ட, பள்ளிக்கரணை காவல் நிலைய பகுதிகளில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடந்த மற்றும் கைவிடப்பட்ட, 146 இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாகனங்கள் பகிரங்க ஏலம் வாயிலாக விற்கப்பட உள்ளன.தங்கள் அடையாள அட்டை, ஜி.எஸ்.டி., பதிவு எண் ஆதாரங்களுடன், பள்ளிக்கரணை காவல் நிலையத்தில், மார்ச் 20 காலை 10:00 மணி முதல் 5:00 மணிக்குள், முன்பதிவு கட்டணம் செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும்.பதிவு செய்தவர்கள், ஏலக்குழு முன்னிலையில், மார்ச் 24, காலை 10:00 மணிக்கு, காவல் நிலையத்தில் நடக்கும் பகிரங்க ஏலத்தில் பங்கேற்கலாம்.
10-Mar-2025