மேலும் செய்திகள்
சாலை நடுவே மெகா பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
23-Sep-2024
நந்தம்பாக்கம் : சென்னை, நந்தம்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பரங்கிமலை - பூந்தமல்லி பிரதான சாலையின் நடுவே, குழாய் பதிக்கும் பணி, இரவு நேரத்தில் நடந்து வருகிறது.நேற்று முன்தினம் இரவு, நந்தம்பாக்கம் வர்த்தக மையம் எதிரே, குழாய் பதிக்கப்பட்டு, மண் போட்டு மூடப்பட்டது.தோண்டிய பள்ளம் சரியாக மூடாததால், கனரக வாகனங்கள் சென்ற நிலையில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டது.இதனால், பூந்தமல்லியில் இருந்து கிண்டி நோக்கி தண்ணீர் கேன்கள் ஏற்றி வந்த வேன், தோண்டப்பட்ட அதே பள்ளத்தில் சிக்கியது.மற்ற வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டதால், நந்தம்பாக்கத்தில் இருந்து போரூர் வரை, 3 கி.மீ., துாரத்திற்கு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன.பள்ளத்தில் சிக்கிய வாகனத்தை, அந்த வழியாக சென்ற பொக்லைன் இயந்திரம் வாயிலாக போலீசார் மீட்டு, போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
23-Sep-2024