உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கட்டுமான நிறுவனம் ரூ.3 லட்சம் தர உத்தரவு

கட்டுமான நிறுவனம் ரூ.3 லட்சம் தர உத்தரவு

சென்னை, ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட கால வரம்புக்குள் வீடு ஒப்படைக்க தவறிய கட்டுமான நிறுவனம், மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மேடவாக்கத்தை அடுத்த ஜல்லடியன்பேட்டையில், 'இண்டியா புல்ஸ் கிரீன்ஸ்' என்ற பெயரில் 'செலைன் எஸ்டேட்ஸ்' நிறுவனம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தில், 72.99 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாங்க, லோகேஷ் குமார் என்பவர், 2022ல் ஒப்பந்தம் செய்தார். இதற்கான விலையில், 92 சதவீத தொகையை பல தவணைகளில் செலுத்தியுள்ளார்.ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி, 2022 மார்ச் இறுதிக்குள் அந்நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை. இது குறித்து லோகேஷ்குமார், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறையிட்டார். இது தொடர்பாக, ஆணையத்தின் விசாரணை அலுவலர் என்.உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கில், கட்டுமான நிறுவனம், வீட்டை குறிப்பிட்ட காலத்தில் ஒப்படைக்கவில்லை என்பது உறுதியாகிறது. கட்டுமான நிறுவனம் கோரியதன் அடிப்படையில் கூடுதல் கால அவகாசமும் அளிக்கப்பட்டது. ஆனால், கட்டுமான நிறுவனத்தின் தாமதத்தால், மனுதாரர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். எனவே, அதற்கு இழப்பீடாக, கட்டுமான நிறுவனம், 3 லட்சம் ரூபாயை மனுதாரருக்கு அளிக்க வேண்டும்.அத்துடன், வழக்கு செலவுக்காக, 50,000 ரூபாய் அளிக்க வேண்டும். இந்த உத்தரவை, 90 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ