தொடரும் பனி மூட்டம்: விமான சேவை தாமதம்
சென்னைசென்னையில் பனி மூட்டம் காரணமாக, நேற்று சில விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து, காலை 6:30 மணிக்கு வரவேண்டிய விமானம், தாமதமாக காலை 9:00 மணிக்கு வந்தது.கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு காலை 7:25 மணிக்கு வந்துவிட்டு, மீண்டும் காலை 8:05 மணிக்கு, கோலாலம்பூர் புறப்பட்டு செல்லும் விமானம், நேற்று காலை 8:30 மணிக்கு தான் சென்னைக்கு வந்தது. கத்தார் நாட்டு தலைநகர் தோஹாவில் இருந்து காலை 8:45 மணிக்கு வரவேண்டிய விமானமும் தாமதமாக வந்தது. மற்ற விமான நிலையங்களில் சென்று விமானங்கள் தரை இறங்குவதை தவிர்க்க, இது போன்று நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னையில் இருந்து விஜயவாடா, அந்தமான், சூரத், டில்லி, கோவை, துபாய் உள்ளிட்ட ஏழு விமானங்கள், அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.