உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எண்ணுார்வாசிகள் எதிர்ப்பால் சர்ச்சை காளி சிலை அகற்றம்

எண்ணுார்வாசிகள் எதிர்ப்பால் சர்ச்சை காளி சிலை அகற்றம்

எண்ணுார்,எண்ணுார், நெட்டுக்குப்பம் 3வது தெருவைச் சேர்ந்த கார்த்திக், 38, தன் வீட்டு வளாகத்திலேயே, கோவில் ஒன்றை கட்டியுள்ளார். இதில், சிவசக்தி காளி, விநாயகர் உள்ளிட்ட சுவாமி சிலைகளை வைத்து வழிபட்டு வந்துள்ளார்.துவக்கத்தில் வீட்டில் வைத்து வழிபட்டவர், இதையடுத்து வெளியே தெரியும்படி வீட்டின் மதில் சுவரை இடித்து கட்டுமானப்பணி மேற்கொண்டு வந்துள்ளார்.'காளி சிலை வழிபாடால், மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு வேலை இல்லை. தொடர்ச்சியாக, ஏழு பேர் இறந்துள்ளனர். தவிர, மாந்திரீகம் செய்வதால், ஊர் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, ஊர் நிர்வாகத்தினர், காளி சிலையை அகற்ற வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர்.அதன்படி, 22ம் தேதி, கோவில் உரிமையாளர் கார்த்திக், அவரது குடும்பத்தாரிடம், திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி, வருவாய் துறை அதிகாரிகள், மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டிருப்பதால், காளி சிலையை அகற்ற கோரினர்.ஆனால், 'சிலையை அகற்ற முடியாது. தங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்' என கார்த்திக் கூறியதால், அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.இந்நிலையில், நேற்று மதியம், ஊர் நிர்வாகத்தினர், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம், இது குறித்து முறையிட்டுள்ளனர். அவரது ஆலோசனையின்படி, ஆர்.டி.ஓ., பெருமாள், தாசில்தார் சகாயராணி உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு முகாமிட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், 4 அடி உயர காளி சிலை உட்பட மூன்று சிலைகளை அப்புறப்படுத்தினர்.பின், மினி லாரி மூலம், சிலைகள் திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகம் கொண்டு வரப்பட்டு, பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.இச்சம்பவத்தால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை