உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வளைகாப்பு விழாவில் தகராறு குழந்தை திருமணம் அம்பலம்

வளைகாப்பு விழாவில் தகராறு குழந்தை திருமணம் அம்பலம்

புளியந்தோப்பு, வளைகாப்பு விழாவில் தகராறு ஏற்படவே, சிறுவன் - சிறுமியருக்கு திருமணம் செய்து வைத்தது வெளிச்சத்திற்கு வந்தது.புளியந்தோப்பில் நடந்த வளைகாப்பு விழாவில், இருதரப்பிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்தனர்.இருதரப்பிலும் காயம் அடைந்தவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனை அளித்த தகவலின் அடிப்படையில் புளியந்தோப்பு போலீசார் விசாரித்தனர். இதில், இளம் வயதினருக்கு திருமணம் செய்து வைத்தது தெரிய வந்தது.சிறுவர் - சிறுமியர் கடந்தாண்டு காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், ஏழு மாத கர்ப்பமான 17 வயது சிறுமி, பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு சென்ற நிலையில் அங்கேயே தங்கிவிட்டார். இந்த நிலையில், வளைகாப்பு நிகழ்வின்போது தகராறு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.இதையடுத்து, சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய சிறுவன் உட்பட இருதரப்பிலும் சேர்த்து, மூவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை