உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சட்டவிரோதமான கழிவுநீர் இணைப்பு கண்டுகொள்ளாத மாநகராட்சி

சட்டவிரோதமான கழிவுநீர் இணைப்பு கண்டுகொள்ளாத மாநகராட்சி

சென்னை, தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட, 18 வார்டுகளிலும் மழைநீர் வடிகாலில் சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது குறித்து ஏராளமான புகார்கள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், புகாரை அறிந்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், தற்போது மழைநீர் வடிகால்கள், கழிவுநீர் கால்வாயாக மாறி உள்ளன.குறிப்பாக, ஆழ்வார்பேட்டையில், சீத்தம்மாள் சாலையில் சிலர் சட்டவிரோதமாக, வெளிப்படையாக பிளாஸ்டிக் குழாயை நேரடியாக மழைநீர் வடிகாலில் கொடுத்துஉள்ளனர். இதுகுறித்து புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கொசு தொல்லை அதிகரித்துள்ளதோடு, கடும் துர்நாற்றமும் அப்பகுதி முழுதும் வீசி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் வடிகாலில் சட்டவிரோதமாக கொடுக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி