உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகராட்சி பள்ளி மாணவி மாநில கேரம் போட்டிக்கு தகுதி

மாநகராட்சி பள்ளி மாணவி மாநில கேரம் போட்டிக்கு தகுதி

சென்னை: கரூரில் நடக்கும் மாநில கேரம் போட்டிக்கு, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவி தகுதி பெற்றுள்ளார். பள்ளிக்கல்வித்துறையின் வருவாய் மாவட்ட கேரம் போட்டி, பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. போட்டியில், 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட இருபாலரிலும் தலா 23 பேர் பங்கேற்றனர். தனிநபர் மற்றும் இரட்டையர் ஆகிய இருபிரிவுகளில் போட்டிகள் நடந்தன. ▶ மாணவியர் 14 வயது பிரிவு தனிநபரில் முருகதனுஷ்கோடி பள்ளியின் ஜனனி, இரட்டையரில் சி.கல்யாணம் பள்ளியின் அக் ஷயா மற்றும் தனிஷ்கா ஜோடி முதலிடங்களை கைப்பற்றினர் ▶ தனி நபர் 17 வயது பிரிவில் பெரம்பூரில் உள்ள சென்னை மாநகராட்சி பெண்கள் பள்ளியின் டெனினா; இரட்டையரில், செயின்ட் பிரான்சிஸ் பள்ளியின் ஜெயஸ்ரீ மற்றும் பிரதீக் ஷா ஜோடி முதலிடத்தை வென்றனர் ▶ தனிநபர் 19 வயது பிரிவில், கன்னட சங்க பள்ளியின் செம்மொழி தமிழா; இரட்டையரில் அதே பள்ளியின் செம்மொழி தமிழா மற்றும் பாக்கியா மற்றும் தர்ஷினி ஜோடி முதலிடத்தை வென்றனர். மாணவர்களில்... ▶ மாணவரில் 14 வயது தனிநபரில் கன்னட சங்க பள்ளியின் சஞ்சீவ் குமார்; இரட்டையரில் பழனிசாமி பள்ளியின் ஷகுந்தன் மற்றும் தீபக் ஜோடி முதலிடத்தை பிடித்தனர். ▶ தனிநபர் 17 வயது பிரிவில் கன்னட சங்க பள்ளியின் நர்வீன்; இரட்டையரில் செயின்ட் பீட்ஸ் பள்ளியின் ரெஹான் மற்றும் தர்ஷன் முதலிடத்தை வென்றனர் ▶ தனிநபர் 19 வயது பிரிவில் மியாசி பள்ளியின் முகமது மிஷ்பா; இரட்டையரில் தனலட்சுமி பள்ளியின் நவீத் அகமது மற்றும் முகமது ஆசர் ஜோடி முதலிடங்களை கைப்பற்றினர். வெற்றி பெற்றவர்கள் கரூரில் நடக்கும் மாநில கேரம் போட்டியில், பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை