கடற்கரையில் ரூ.1.18 கோடியில் நடைபாதை
சென்னை: சென்னையில் உள்ள கடற்கரையில் மற்றவர்களை போல், மாற்றுத்திறனாளிகளும் எவ்வித சிரமமின்றி, கடல் அழகை ரசிக்கவும், கடல் அலையில் கால்களை நனைக்கவும், அவர்களுக்கான பிரத்யேக நடைபாதையை மாநகராட்சி அமைத்து வருகிறது. மெரினாவை தொடர்ந்து பெசன்ட் நகர் கடற்கரையிலும் அமைக்கப்பட்ட நடைபாதை, சமீபத்தில் பயன்பாட்டிற்கு வந்தது.இதைத்தொடர்ந்து, 1.18 கோடி ரூபாய் மதிப்பில், திருவான்மியூர் நடைபாதையில், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக நடைபாதை அமைக்க, மாநகராட்சி 'டெண்டர்' கோரியுள்ளது.