உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வடிகால் பணியின்போது இடிந்த சுற்றுச்சுவர் ரூ.1 லட்சம் இழப்பீடு பெற்று தந்த கவுன்சிலர்

வடிகால் பணியின்போது இடிந்த சுற்றுச்சுவர் ரூ.1 லட்சம் இழப்பீடு பெற்று தந்த கவுன்சிலர்

எண்ணுார் :திருவொற்றியூர் மண்டலம் 4வது வார்டில், மழைநீர் வடிகால் பணிகளை, 'சக்தி கன்ஸ்ட்ரக்ஷன்' எனும் தனியார் ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பள்ளம் தோண்டும் போது மதில் சுவர் இடிந்து சேதம் ஏற்பட்டவர்களுக்கு, இழப்பீடு வழங்காமல் இருப்பதை கண்டித்து, 4வது வார்டு, மார்க்.கம்யூ., கவுன்சிலர் ஜெயராமன், நேற்று காலை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தார்.சுதாரித்த மாநகராட்சி அதிகாரிகள், தனியார் ஒப்பந்த நிறுவனத்துடன் பேசி கவுன்சிலரை சமாதானம் செய்தனர். தொடர்ந்து, முதற்கட்டமாக நான்கு குடும்பத்தினருக்கு, மதில் சுவர் கட்டுமானத்திற்கு, சேதத்திற்கு ஏற்ப என, மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை, நேற்று வழங்கினர்.இழப்பீடு தொகையை, கவுன்சிலர் ஜெயராமன், உதவி செயற்பொறியாளர் நமச்சிவாயம், தனியார் ஒப்பந்த நிறுவன அதிகாரிகள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கினர். இதில், மாதர் சங்கம் மாவட்ட செயலர் பாக்கியம், சி.பி.ஐ.எம்., நிர்வாகி வெங்கட்டையா ஆகியோர் பங்கேற்றனர்.இரண்டாவது கட்டமாக, விடுபட்ட ஆறு குடும்பங்களுக்கு, இழப்பீடு தொகை வழங்கப்படும் என, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை