மேலும் செய்திகள்
சமையல் விஷயத்தில் தகராறு மனைவியை கொன்ற கணவர்
27-Jun-2025
திருவொற்றியூர்,குடும்ப தகராறில், அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டு, தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.மணலிபுதுநகரைச் சேர்ந்தவர் வேதகிரி, 45; புரோகிதர். இவரது மனைவி ஹேமமாலினி, 42. இவர்களுக்கு, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி, கணவருடன் தனியே வசிக்கிறார். கடந்த வாரம், வேதகிரி - ஹேமமாலினி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், ரத்த அழுத்தத்திற்கு உட்கொள்ள கூடிய மாத்திரைகளை எடுத்து, வேதகிரி சாப்பிட்டதில் மயங்கி விழுந்துள்ளார்.இதை பார்த்த ஹேமமாலினியும், அந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டுள்ளார். இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹேமமாலினி, நான்கு நாட்களுக்கு முன் இறந்தநிலையில், நேற்று காலை வேதகிரி, சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து, மணலிபுதுநகர் போலீசார், வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
27-Jun-2025