பயன்பாட்டுக்கு வந்தது மணலியில் தகனமேடை
சென்னை:சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:மணலி மண்டலம், 20வது வார்டுக்கு உட்பட காமராஜர் சாலை மயானபூமியில், புதிதாக எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தகன மேடை, நேற்று முன்தினம் முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த எரிவாயு தகன மேடையை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.