மேலும் செய்திகள்
எஸ்.பி.ஆர்., சிட்டியில் இணைந்த ஜோயாலுக்காஸ்
14-Dec-2024
திருமங்கலம், ஷெனாய் நகரில் அமைக்கப்பட்டு வரும் விளையாட்டு திடல், திருமங்கலத்தில் உள்ள ஓ.எஸ்.ஆர்., எனும் திறந்தவெளி ஒதுக்கீடு நிலத்தை, அமைச்சர் சேகர்பாபு நேற்று, சி.எம்.டி.ஏ., துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பின், அவர் அளித்த பேட்டி:திருமங்கலத்தில், 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஓ.எஸ்.ஆர்., நிலத்தை, பொழுதுபோக்கு அம்சங்களுடன், உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அமைக்கும் வகையில் கட்டமைப்பு உருவாக்கப்படும்.பயன்பாடில்லாத இடங்களில் பூங்கா, விளையாட்டு திடல் உள்ளிட்ட மக்கள் எதிர்பார்க்கும் வசதிகளை அமைத்து வருகிறோம். அந்தவகையில், 2,000 கோடி ரூபாயில் வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகள் நடக்கின்றன.இரு ஆண்டுகளில், 192 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தாண்டு இறுதிக்குள், பல்வேறு பணிகள் நிறைவு செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இடவசதி இருந்தால், வடசென்னையில் கிரிக்கெட் மைதானம் நிச்சயம் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு கூறினார்.
14-Dec-2024