கவுன்சிலர் வீட்டில் திருட்டு
அச்சிறுபாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சி 15வது வார்டுக்கு உட்பட்ட வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா, 50. இவர், 15வது வார்டு கவுன்சிலர். நேற்று காலை, இவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து, பீரோவிலிருந்த மூன்று சவரன் தங்க நகையை, மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அச்சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.