கிரைம் கார்னர்
பட்டதாரி வாலிபர் மயங்கி விழுந்து பலி
மடிப்பாக்கம்: மடிப்பாக்கம், ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் ஸ்ரீவத்சன், 21; பி.காம்., பட்டதாரி. இவருக்கு துாக்கமின்மை பிரச்னை இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, மது அருந்தி, கைவேலி அருகே நடந்து சென்றபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். குரோம்பேட்டையில் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் வரும் வழியிலே இறந்தது தெரிந்தது. -- வடமாநில வாலிபர்
மர்ம மரணம்
மயிலாப்பூர்: மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அதுல், 24. கட்டுமான தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, திடீரென அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே, சக ஊழியர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து, மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர். --- 23 கிலோ கஞ்சா
பறிமுதல்; இருவர் கைது
அம்பத்துார்: அம்பத்துார் ரயில் நிலையம் அருகே சுற்றித்திரிந்த, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நசு ஷேக், 52, திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த அப்துல்கலாம், 43, ஆகியோரை, அம்பத்துார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று பிடித்தனர். அவர்களிடமிருந்து 3.45 லட்சம் ரூபாய் மதிப்புடைய 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.