உள்ளூர் செய்திகள்

கிரைம் கார்னர்

மயங்கி விழுந்து முதியவர் பலி அம்பத்துார்: ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் கணேசன், 63, அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்திற்கு, நேற்று முன்தினம் சென்றார். அங்கு, உணவுக்காக காத்திருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கணேசன் இறந்தார். இதுகுறித்து, அம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர். சாலையில் பெண்ணிடம் வாலிபர் 'சில்மிஷம்' தேனாம்பேட்டை: தேனாம்பேட்டையைச் சேர்ந்த 22 வயது கல்லுாரி மாணவி, நேற்று முன்தினம் இரவு எல்டாம்ஸ் சாலை வழியாக நடந்து சென்றார். தேனாம்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ், 30, என்பவர் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அவரை, போலீசார் கைது செய்தனர். உதவுவதுபோல் வழிப்பறி இருவர் கைது ராயப்பேட்டை: ராயப்பேட்டை, லாய்ட்ஸ் காலனியைச் சேர்ந்தவர் சிராஜ்குப்தா, 31. இரு நாட்களுக்கு முன், தன் வீட்டருகே இவரது மூக்கில் ரத்தம் வடிந்தது. அவ்வழியே 'டியோ' ஸ்கூட்டரில் வந்த இருவர், தண்ணீர் பாட்டில் தந்து உதவுவதுபோல், கத்தியை காட்டி மிரட்டி சிராஜ்குப்தாவிடம் இருந்த, 'ஐ போன்' மற்றும் 4,000 ரூபாயை பறித்துச் சென்றனர். ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரித்து, ராயப்பேட்டை அருண், 23, தீனா, 18, ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை