உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்

மனைவியை பிளேடால் அறுத்த கணவர் கைது அசோக் நகர்: அசோக் நகரைச் சேர்ந்த பாலமுருகன் , 45, டெய்லரான அவரது மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி பிரச்னை செய்துள்ளார். இந்நிலையில் 17ம் தேதி ஏற்பட்ட தகராறில், மனைவியை பிளேடால் தாக்கியுள்ளார். அக்கம் பக்கத்தினர் வந்து காப்பாற்றி உள்ளனர். அசோக் நகர் போலீசார், பாலமுருகனை நேற்று கைது செய்தனர். அடிதடியில் ஈடுபட்ட 6 பேருக்கு 'காப்பு' எண்ணுார்: எண்ணுார், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த யுவராஜ், 18, தன் தந்தையின் பிறந்தநாளையொட்டி, நேற்று முன்தினம் இரவு, தன் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அங்கு வந்த, அதே பகுதியைச் சேர்ந்த சுரேந்தர், 26, யுவராஜுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தன் நண்பர்களுடன் சேர்ந்து, யுவராஜ் மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக தாக்கினார். எண்ணுார் போலீசார் அடிதடியில் ஈடுபட்ட, யுவராஜ், சுரேந்தர் உட்பட ஆறு பேரை கைது செய்தனர். பெரியம்மாவை தாக்கிய மகன் கைது பெரம்பூர்: பெரம்பூர், நெல்வயல் சாலை பகுதியைச் சேர்ந்த அம்பிகா, 48, நே ற்று முன்தினம் இரவு , போதையில் தகராறு செய்த தன் தங்கை மகன் சூர்யாவை கட்டுப்படுத்தியுள்ளார் . சூர்யா, தகாத வார்த்தை களால் பேசி, அம்பிகாவை தன் ந ண்பருடன் சேர்ந்து கல்லால் அடித்ததில் காயமடைந்தார். செம்பியம் போலீசார் வழக்கு பதிந்து, சூர்யா,25, அவரது நண்பர் மனோ ஜ், 23, ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். சண்டையை தடுத்த நபருக்கு தர்ம அடி புழல்: காவாங்கரை பகுதியைச் சேர்ந்த ரமேஷ், 38, நண்பர் இளங்கோவுடன், கடந்த 6ம் தேதி காவாங்கரை கே.எஸ்., நகரில் நடந்து சென்றார். அங்கு, விக்னேஷ், 30, முரளிகிருஷ்ணன், 40, மற்றும் அரிகிருஷ்ணன், 37, ஆகியோர், குடும்ப தகராறு காரணமாக சண்டையிட்டனர். அப்போது ரமேசும், இளங்கோவும் சண்டையை விலக்கி விட்டுள்ளனர். அந்த ஆத்திரத்தில் மூவரும் சேர்ந்து, ரமேஷை உருட்டு கட்டையால் தாக்கினர். காயமடைந்த ரமேஷ் புகாரையடுத்து, மூவரையும், போலீசார் கைது செய்தனர். கூலி தொழிலாளியை தாக்கியவர் கைது பிராட்வே: பிராட்வே, செம்புதாஸ் தெருவைச் சேர்ந்த டில்லிபாபு, 29, இம்மாதம் 19ல் தன் மீன்பாடி வண்டியில் அமர்ந்திருந்தார். அந்த வழியாக நடந்து வந்த பிராட்வேயைச் சேர்ந்த கோபால், 21, இவர் அவரிடம் வீண் தகராறு செய்தார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அவர், அங்கே கிடந்த கட்டையை எடுத்து, டில்லிபாபுவை தாக்கினர். எக்ஸ் பிளனேடு போலீசார் கோபாலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி