மேலும் செய்திகள்
மின்வடங்கள் சீரமைப்பு
17-Nov-2025
மதுரவாயல்: வளசரவாக்கம், எஸ்.வி.எஸ்., நகரில் முதல் பிரதான சாலையில் குடும்பத்துடன் வசிப்பவர் கணேசன், 45. நேற்று இரவு, 7:40 மணிக்கு, இவரது வீட்டில் மின்வடங்கள் தீப்பிடிக்க துவங்கின. அறை முழுதும் தீ பரவி எரிந்ததால், வீட்டில் இருந்தோர் அலறியடித்து வெளியேறினர். விருகம்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து, தீயை அணைத்தனர். வீட்டில் இருந்த, லேப்டாப், கட்டில் மற்றும் வீட்டு உபயோக பொருள் அனைத்தும் சேதமடைந்தன. மின்கசிவால் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.
17-Nov-2025