உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மரண வீட்டில் கத்திக்குத்து; 4 பேர் கைது

மரண வீட்டில் கத்திக்குத்து; 4 பேர் கைது

செம்மஞ்சேரி: செம்மஞ்சேரி, சுனாமி நகரில் உள்ள மரண வீட்டில், இரு நாட்களுக்கு முன் இறுதி சடங்கு நிகழ்ச்சி நடந்தது. போதையில் இருந்த சூர்யகுமார், 27, அங்குள்ள மக்களிடம் வீண் தகராறு செய்தபோது, கோபாலகிருஷ்ணன், 41, என்பவர், அதை தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த சூர்யகுமார், உறவினர்கள் மூன்று பேருடன் சேர்ந்து, அவரை சரமாரியாக தாக்கி, கத்தியால் குத்தினார். பலத்த காயமடைந்த கோபாலகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். செம்மஞ்சேரி போலீசார், சூர்யகுமார், செல்வகுமார், 23, சக்திவேல், 21, ரிஷி, 25, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை