உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / த.வெ.க., நபர் சாலையில் பிறந்தநாள் கொண்டாட்டம்

த.வெ.க., நபர் சாலையில் பிறந்தநாள் கொண்டாட்டம்

ராமாபுரம்: ராமாபுரம், பூத்தப்பேடு குப்புசாமி நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், 35; ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று முன்தினம் இரவு, ராமாபுரம் ஏழுமலை தெரு வழியாக, ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். வழியில், சாலையை மறித்தபடி, தமிழக வெற்றிக் கழக நிர்வாகி பிரீத்குமார் மற்றும் அவரது நண்பர்கள், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மணிகண்டனை வழிமறித்த அவர்கள், ஆட்டோவில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கி வாயிலாக சினிமா பாடல்களை ஒலிக்கவிடும்படி கூறினர். அவர் மறுக்கவே, பிரீத் குமார் மற்றும் அவரது நண்பர்கள், மணிகண்டனை தாக்கினர். இதில் காயமடைந்த மணிகண்டன், ராமாபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை