உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வழிப்பறி ரவுடி கைது

வழிப்பறி ரவுடி கைது

புளியந்தோப்பு: புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார், 27, கடந்த 23ம் தேதி, பேசின்பாலம் துளசிநாயக்கன் தெருவில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் மொபைல் போன், ஏ.டி.எம்., கார்டு உள்ளிட்டவற்றை பறித்து சென்ற அதே பகுதியைச் சேர்ந்த விஜய், 23, என்ற ரவுடியை, போலீசார் கைது செய்தனர். *** பெண்ணை சீண்டிய டெலிவரி ஊழியர் கைது சூளைமேடு: மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 28 வயது பெண், சூளைமேடில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் துாங்கி கொண்டிருந்த பெண்ணிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டு மர்ம நபர் தப்பினார். சூளைமேடு போலீசார் வழக்கு பதிந்து, உணவு டெலிவரி வேலை செய்யும் சைதாப்பேட்டையைச் நேதாஜி, 33, என்பவரை நேற்று கைது செய்தனர். *** ஸ்கூட்டர் திருடிய ரவுடி உட்பட மூவர் கைது வண்ணாரப்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை, ராமதாஸ் நகரைச் சேர்ந்தவர் சிராஜுதீன், 26. கடந்த 30ம் தேதி, இவரது 'சுசூகி பர்க்மேன்ʼ ஸ்கூட்டர் திருடு போனது. வழக்கு பதிந்த வண்ணாரப்பேட்டை போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், 19, விஷால், 19, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஆபிரகாம் என்ற அபி, 23, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து, ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர். *** கடன் தொல்லை; வாலிபர் தற்கொலை வேளச்சேரி: வேளச்சேரி, வீனஸ் காலனியைச் சேர்ந்தவர் மரியஜோஸ், 27; கேட்டரிங் தொழில் செய்து வந்தார். தொழிலில் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிலரிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மனஉளைச்சலில் இருந்துள்ளார். நேற்று, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை