உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தொட்டியில் இருந்து விழுந்து சிறுவன் காயம்

தொட்டியில் இருந்து விழுந்து சிறுவன் காயம்

வேளச்சேரி: வேளச்சேரி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஷாம்மார்கீஸ், 17. தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவர். தன் வீட்டின் இரண்டாவது மாடியில், தண்ணீர் தொட்டியில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என, நேற்று காலை எட்டி பார்த்தார். அப்போது, தவறி விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கிண்டி, அரசு பல்நோக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். சம்பவம் தொடர்பாக, வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்