உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மகன் திட்டியதால் தாய் தற்கொலை

மகன் திட்டியதால் தாய் தற்கொலை

அயப்பாக்கம்: அம்பத்துார் அடுத்த அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்வரி, 43. இவருக்கு, சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. இதற்காக, இளைய மகன் சூர்யபிரகாஷிடம் வீண் செலவுகளை தவிர்த்து, பணத்தை சேமிக்கும்படி கூறியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில், நேற்று முன்தினம் மகன் சண்டையிடவே, மன உளைச்சலில் இருந்த ராஜேஷ்வரி, படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். -'டம்மி' துப்பாக்கி காட்டி மிரட்டியவர் கைது திருவொற்றியூர்: திருவொற்றியூர் கிராமத் தெருவில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை, கடந்த 16ல் கடலில் கரைத்த பின், சிலை வைத்தது தொடர்பாக, 17ல் வரவு - செலவு கணக்கு ஆராயப்பட்டது. அப்போது, ஜெயகுமார் என்பவர் எழுப்பிய கேள்வியால் ஆத்திரமடைந்த ஜெயின் பால், 40, என்பவர், வீட்டில் இருந்த 'டம்மி' துப்பாக்கியை வைத்து ஜெயகுமாரை மிரட்டி, கத்தியால் குத்த முயன்றார். திருவொற்றியூர் போலீசார், ஜெபின் பாலை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். ஜெயின் பால் மகனுக்காக, 'ஆன்லைன்' வாயிலாக, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 'ஏர் கன்' வகையைச் சேர்ந்த துப்பாக்கி என்பது விசாரணையில் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !