உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை

வாகனங்களை மறித்து மாமூல்: இருவர் கைது வியாசர்பாடி: வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர், முல்லை நகர் ஆகிய இடங்களில், சரக்கு லாரி மற்றும் வேன்களை நிறுத்தி, அவற்றின் ஓட்டுநர்களை மிரட்டி மாமூல் வாங்கிய, அதே பகுதி தொப்பை' அசோக், 27, கலைவாணன், 26, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர். கஞ்சா விற்ற இருவர் பிடிபட்டனர் வியாசர்பாடி: வியாசர்பாடி, முதலாவது பள்ள தெருவில் அரை கிலோ கஞ்சாவை விற்பதற்காக சுற்றி திரிந்த வியாசர்பாடி நேரு நகரைச் சேர்ந்த பரத், 25, சுகுமார், 21, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர். மது விற்ற இருவர் சிக்கினர் பெரம்பூர்: பெரம்பூர், தான்தோன்றி அம்மன் கோவில் தெருவில் நேற்று முன்தினம், இருசக்கர வாகனத்தில் பதுக்கி கள்ள சந்தையில் மது விற்ற புரசைவாக்கத்தைச் சேர்ந்த செல்வகுமார், 43, பெரம்பூர் வேளாங்கண்ணி, 45, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். 'ஓசி' பீடி கேட்டு போன் திருடிய இருவருக்கு வலை கொடுங்கையூர், எம்.ஆர்.நகரில் உள்ள தனியார் வங்கியில், காவலாளியான பன்னீர்செல்வத்திடம் நேற்று முன்தினம் இரவு, பீடி கேட்பது போல் நடித்து, அவரது மொபைல் போனை திருடிய மர்ம நபர்கள் இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை