உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கிரைம் பாயின்ட்: பணம் பறித்த வழக்கில் ரவுடி கைது

 கிரைம் பாயின்ட்: பணம் பறித்த வழக்கில் ரவுடி கைது

பெரம்பூர்: செம்பியம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேல்பட்டி பொன்னப்பன் தெரு பகுதியில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடையில் மது குடிக்க வரும் நபர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில், பெரம்பூர் எஸ்.எஸ்.வி., கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான அமர்நாத், 29, என்பவரை செம்பியம் போலீசார் நேற்று கைது செய்தனர். கஞ்சா விற்ற இருவர் சிக்கினர் புளியந்தோப்பு: புளியந்தோப்பு, டாக்டர் அன்சாரி தெருவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மியா என்கிற ஆனந்தவல்லி, 36, லோகநாதன், 35, ஆகியோரை புளியந்தோப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்; 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவு குற்றவாளி பிடிபட்டார் வியாசர்பாடி: வியாசர்பாடி, சாமந்திப்பூ காலனியைச் சேர்ந்தவர் விஜயகுமார், 31; ரவுடி. குற்ற வழக்கில் ஆஜராகாமல் இருந்த விஜயகுமாரை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, நீதிபதிகள் பிடியாணை பிறப்பித்தனர். இதையடுத்து வியாசர்பாடி போலீசார் நேற்று, விஜய குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவர்கள் இடையே மோதல் வியாசர்பாடி: வியாசர்பாடியில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். நேற்று காலை பள்ளி வளாகத்திற்கு உள்ளே பிளஸ் 1 படிக்கும் மாணவர் ஒருவருக்கும், அதே வகுப்பில் படிக்கும் இரு மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாய் தகராறு முற்றிய நிலையில், கைகலப்பாக மாறியது. இதில் ஒரு மாணவர் படுகாயமடைந்தார். விசாரித்த போலீசார், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை