சி.எஸ்.கே., - யு15 கிரிக்கெட்: எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி சாம்பியன்
சென்னை, திருவள்ளூர் கிரிக்கெட் சங்கம் மற்றும் சி.எஸ்.கே., கிளப் இணைந்து, 'யு15' கிரிக்கெட் போட்டியை, ஆவடி ஓ.சி.எப்., மைதானம் மற்றும் பட்டாபிராம் இந்து கல்லுாரியில் நடத்தின.போட்டியில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, பல்வேறு பள்ளி அணிகள், 'ஏ' முதல் 'எச்' வரையிலான குரூப்களில் பங்கேற்றன.நேற்று, ஆவடியில் உள்ள மத்திய அரசின் ஓ.சி.எப்., மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில், கொரட்டூர் எபினேசர் மற்றும் அண்ணா நகர் எஸ்.பி.ஓ.ஏ., பள்ளிகள் எதிர்கொண்டன.முதலில் பேட்டிங் செய்த எபினேசர் பள்ளி, 29.5 ஓவர்களில் 'ஆல் அவுட்' ஆகி, 119 ரன்களை அடித்தது. அடுத்து பேட்டிங் செய்த எஸ்.பி.ஓ.ஏ., அணி, 26.2 ஓவர்களில், ஒரு விக்கெட் மட்டும் இழந்து, 120 ரன்களை அடித்து, ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.