ரவுடிக்கு வெட்டு மற்றொரு ரவடி கைது
குன்றத்துார்: சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த ரவுடிகள் ஜீவா ஜெகதீஷ், 25 மற்றும் அர்ஜூன், 30 ஆகிய இருவரும் நண்பர்கள். அர்ஜூன் மனைவியுடன் ஜீவா ஜெகதீஷூக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி, குன்றத்துார் அருகே கோவூரில், தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். இதனால், ஆத்திரமடைந்த அர்ஜூன், தனது நண்பர்களுடன் கோவூர் சென்று, ஜீவா ஜெகதீஷை ஆட்டோவில் ஏற்றி ஆயிரம் விளக்கு பகுதியில் கத்தியால் வெட்டி இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.படுகாயம் அடைந்த ஜீவா ஜெகதீஷ், ராஜிவ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அர்ஜூனை கைது செய்த மாங்காடு போலீசார், தலைமறைவாக உள்ள கூட்டாளிகள் இருவரை தேடி வருகின்றனர்.