சில்மிஷ போதை நபர்களை கண்டித்தவர்களுக்கு வெட்டு
அரும்பாக்கம்:அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று, அருகிலுள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர்.இதைப் பார்த்து அப்பெண்ணின் தாய் தட்டிக் கேட்க வந்த போது, கஞ்சா போதையில் இருந்த அந்த நபர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்ட முற்பட்டனர்.உடனே அவர், மகளுடன் அங்கிருந்து தப்பியோடினார்.அப்போது, அங்கிருந்த இரு வாலிபர்கள் தட்டிக் கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா போதை வாலிபர்கள், தட்டிக் கேட்ட வாலிபர்களை கத்தியால் சரமாரியாக வெட்டினர்.காயமடைந்த இருவரையும், அங்கிருந்தோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இது குறித்து அரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.