உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பலே சைபர் குற்றவாளி சென்ட்ரலில் சிக்கினார்

பலே சைபர் குற்றவாளி சென்ட்ரலில் சிக்கினார்

சென்னை, தெலுங்கானா மாநிலம், ஹனம்கொண்டா நகரைச் சேர்ந்தவர் எருகல சுதர்சன், 44. இவர், இணையதளத்தில் கண்ட முதலீட்டு நிறுவனத்தில் முதலில் சிறிய தொகையில் முதலீடு செய்தார். அந்த தொகை இரட்டிப்பானது போல தகவல் கிடைத்தது. இதையடுத்து, 16 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து ஏமாற்றப்பட்டார். வாரங்கல் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.விசாரணையில், பிரதீப் வைஷ்ணவ், 24, என்பவர் மோசடியில் ஈடுபட்டதும், இதேபோல் நாடு முழுதும், 1.50 கோடி ரூபாய் வரை, 90க்கும் மேற்பட்ட சைபர் மோசடி வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரிந்தது. இதையடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பதுங்கி இருந்த பிரதீப் வைஷ்ணவை, சென்ட்ரல் ரயில்வே போலீசார் கைது செய்து வாரங்கல் சைபர் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை